pandian stores

முல்லைக்கு விபத்து ஏற்பட்ட நிலையில் இன்று வரையிலும் நினைவு திரும்பாமல் இருக்கிறார். இதனால் அவருக்கும் அவருடைய குழந்தைக்கு என்ன ஆகும் என்று பாண்டியன் ஸ்டோர் குடும்பமே ஒரே பதட்டத்தில் இருக்கிறது.

அதாவது முல்லைக்கு இதுவரையிலும் சுய நினைவே வரவில்லை. இதனால் கதிர் அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறார். முல்லையின் அம்மா கோயில் குளமாக சுற்றி சுற்றி வருகிறார். என்னுடைய மகனுக்கு எதுவும் ஆகக்கூடாது அவளுடைய குழந்தைக்கும் எதுவும் ஆகக்கூடாது என்று அழுது கொண்டு புலம்பி வருகிறார்.

அதன் பிறகு முல்லை அம்மாவுக்கு தனம் ஆறுதல் சொல்லுகிறார். அதன் பிறகு கதிரை அவருடைய அண்ணன் சமாதானப்படுத்துகிறார் ஆனால் கதிர் அழுது கொண்டே தான் இருக்கிறார். முல்லைக்கு என்ன ஆனது என்று மருத்துவர்கள் எதுவுமே கூறவில்லை இதனால் மொத்த குடும்பமும் ஆடிபோய் உட்கார்ந்து இருக்கிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *