vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்து பிசியாக இருக்கும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படம் குறித்த ஒரு புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

அதாவது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படத்தை இயக்குனர் சுவாமிநாதன் இயக்க உள்ளார் எனவும் இந்த படத்திற்கு மகாராஜா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது ஆறுமுக குமார் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முடிந்தவுடன் அடுத்ததாக தனது 50வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *