vada-chennei

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களை இயக்கி தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.

மேலும் இவர் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமான வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என பலமுறை ரசிகர்கள் வெற்றிமாறனிடம் கேள்வியாக எழுப்பியதுன்டு இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட வெற்றிமாறன் வடசென்னை 2 படம் குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலை நடைபெற்று வருகிறது அதன் பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த படம் முடிந்ததும் வடசென்னை படத்தின் இரண்டாவது பாகம் தான் என்று கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *