leo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது லியோ  திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மதம் வெளியாக இருப்பதை படக்குழு ஏற்கனவே அறிவித்தது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு திரைப்படம் இதே தினத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தில அதிகம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் வசூலில் பல மடங்கு வேட்டை ஆடும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்த நேரத்தில் அதே தினத்தில் முன்னணி நடிகரின் படம் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆம் நடிகர் விக்ரம் நடிப்பில் கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் லியோ படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்கு குறைக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் லியோ திரைப்படத்தின் வசூல் பல மடங்கு அடி வாங்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமான தகவல் கிடையாது இது ஒரு வதந்தியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *