vijay

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் அண்மையில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களை சந்தித்து ஊக்க தொகை கொடுத்துள்ளார். இவருடைய இந்த செயல் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது அரசியல் குறித்து பல விமர்சனங்கள் முன் வைத்தார். இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகர் விஜய் விரைவில் அரசியலில் வரப்போகிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு உள்ளார் இந்த பதிவு தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது. “அதாவது சூப்பர் ஸ்டாரை மீம்ஸ் போட்டு அரசியலுக்கு வர விடாமல் பண்ணியாச்சு. ஆனால் கமாண்டர் சுறாவை வச்சு ஆட்ச்சியை பிடிக்க தாமரை ஆர்மி திட்டம் போடுது. நம்மாளு ரெய்டில் சிக்கியதால் வேற வழி இல்லாம அரசியலுக்கு வந்தாக வேண்டி கட்டாயப்படுத்தி இருக்காங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே… நெசம்தானா? என்று விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *