leo

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது.

மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கின்ற நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்புப்பை பெற்று இருக்கிறது.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த திரைப்படம் 25வது திரைப்படம் என்பதால் சர்வதேச அளவில் உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் லியோ திரைப்படத்தை விட தளபதி 68 வது திரைப்படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *