tamanna

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு வெப் சீரியஸில் நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸில் எல்லையற்ற கவர்ச்சி காட்டி நடித்த தமன்னா அதே கவர்ச்சியுடன் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

இந்த நிலையில் இந்த பாடலுக்கு நடனமாடியதற்காக நடிகை தமன்னாவிற்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பாடலிலும் நடிகை தமன்னா கவர்ச்சியை தூக்கலாக காட்டியிருக்கிறார். இதை பிரபல விமர்சகர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமன்னா இந்த அளவிற்கு கவர்ச்சி காட்டுவது என்ன காரணம் என்று ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறார்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *