jawaan

ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் அட்லி. இந்த படம் வெற்றி பெறவே அதன் பிறகு தொடர்ந்து விஜய் வைத்து மூன்று படங்களை இயக்கினார் இந்த மூன்று படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் முதன்முதலாக அறிமுகமாகி இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான திறமையினால் தன்னை மெழுகு ஏத்தி வருகிறார் இயக்குனர் அட்லி.

இதனைத் தொடர்ந்து தற்போது ஜவான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் இறுதி கட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜவான் திரைப்படத்திற்காக இயக்குனர் அட்லி வாங்கிய சம்பளம் விவரம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் அட்லியின் தனித்துவமான திறமைக்கு ஷாருக்கான் அவர்கள் 40 கோடியை சம்பளம் வாரி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *