sada

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் ஜொலித்து வந்தவர் தான் நடிகை சதா. இவர் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் பல விருதுகளை வென்றார். அதன் பிறகு சங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படி சினிமாவில் ஜொலித்து வந்த நடிகை சதா ஒரு கட்டத்திற்கு மேல அவருக்கு எந்த ஒரு திரைப்படமும் சரியாக கை கொடுக்கவில்லை அது மட்டுமல்லாமல் பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போனது. இதற்கு முக்கிய காரணமே சதா தான் என்று பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.

அதாவது நடிகை சதா அவர்கள் புகைப்பழக்கம் மற்றும் போதை பழக்கம் வைத்திருந்ததால் தான் இவருக்கு பட வாய்ப்பு அமையவில்லை என்று பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இதை அவர் நேரடியாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கெட்ட பழக்கத்தால் தான் அவர்களுக்கு வந்த பட வாய்ப்பு போனதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் தற்போது இதை நினைத்து மிகவும் கவலைப்பட்டு வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *