rajini

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் 80 மற்றும் 90களில் இருந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வைத்திருக்கிறார் நடிகர் ரஜினி.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி திரையில் வெளியாக காத்திருக்கிறது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து படமும் வெற்றி அடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் ரஜினி அவர்கள் ஜெயிலர் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அதாவது நடிகர் ரஜினி அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *