Dhruva-Nakshatram

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் பிசியாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தின் படபிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும் இந்தப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

மேலும் துருவ நட்சத்திரம் படத்தின் படக்குழு ஜான் உங்களை சந்திப்பார் என்று ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது. மேலும் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *