leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர்.

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நான் ரெடி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.

மேலும் இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை, தியேட்டர் உரிமை என அனைத்து உரிமமும் சேர்த்து இந்த படத்தை 400 கோடிக்கு மேல் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு திரையரங்கு உரிமை மட்டும் 25 கோடி கொடுத்து கைப்பற்றியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *