krithi-shetty

மலையாள சினிமாவில் உப்பென்னா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் அறிமுகமான முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் அந்த சமையத்தில் சூரியாவுக்கும் பாலாவுக்கும் இடையே சில மனகசப்பு காரணமாக சூர்யா வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு இந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதும் இயக்குனர் பாலா இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்கவைத்துள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படி இருந்தும் மனம் தளராத கீர்த்தி ஷெட்டி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கீரத்தி ஒரு அழகிய புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைடத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *