polladhavan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் திரைப்படத்தில் நடித்திருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த படம் வெற்றிமாறனின் முதல் படம் அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் என்றும் சொல்லலாம். அதன் பிறகு தனுஷ் வெற்றி மாறனும் பல படங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் இன்னும் சில திரைப்படங்களில் வெற்றிமாறன் கூட்டணியில் தனுஷ் அவர்கள் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது பொல்லாதவன் படத்தின் முதல் தலைப்பு இதுதான் என்று ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பொல்லாதவன் படத்திற்கு முதன் முதலில் இரும்பு குதிரை என டைட்டில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த டைட்டில் தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காததால் வேற என்ன டைட்டில் வைப்பது என்றே தெரியாமல் இருந்து வந்த வெற்றிமாறனிடம் அதுக்கு பொல்லாதவன் வைத்துவிட்டு போலாம் என கூறிவிட்டாராம் தனுஷ். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரளாகி வருகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *