jawan

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஜவான். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா அவர்கள் நடித்துள்ளார் மேலும் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் மிரட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாக தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் டிரைலரை  நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிடுகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *