aditi-shankar

பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் போன இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி சங்கர் அவர்கள் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பாடகியும்மாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது நடிகை அதிதி சங்கர் மாவீரன் படத்திறாக பெற்ற சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகை அதிதி சங்கர் அவர்கள் மாவீரன் படத்தில் நடித்ததற்காக 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் நடிகை அதிதி சங்கர் மாவீரன் படத்திலும் ஒரு பாடலை பாடி அசத்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது மேலும் ஒரு சிறப்பு தகவல்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *