maveeran

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பிரின்ஸ் என்ற ஒரு மிகப்பெரிய தோல்வி படத்தை கொடுத்ததன் மூலம் மிகப்பெரிய ஒரு நஷ்டத்தை எதிர்கொண்டார். அது மட்டுமில்லாமல் பல விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால் சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு எதிர்ப்பு வந்து கொண்டே இருந்தது அப்படி இருந்தும் மாவீரன் என்ற ஒரு படத்தில் தற்போது நடித்து முடித்து விட்டார்.

இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகளான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையில் வெளியாக காத்திருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் அவர்கள் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மாவீரன் திரைப்படம் ஒரு யதார்த்தமான கதைகளை கொண்டது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிகாட்டி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் மாஸ் ஹீரோக்கள் தங்களுடைய படத்தில் சில காட்சிகளை நீக்கவும் அல்லது ஏதாவது மாஸ் காட்சிகள் உள்ளே திணிக்கவும் செய்வார்கள் ஆனால் சிவகார்த்திகேயன் அப்படி எதுவும் செய்யவில்லை கதைக்கு என்ன தேவையோ அதை எதார்த்தமாக கொடுத்திருக்கிறார் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *