maaveeran

குறுகிய காலத்தில் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாலத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் வில்லனாக மிஸ்கின் அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மேலும் இந்த திரைப்படத்தில் குரல் ஒலியாக விஜய் சேதுபதி அவர்கள் குரல் கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருக்கிறார். அதாவது அவர் வெளியிட்ட பதிவில் மாவீரன் சக்சஸ் என தம்சப் காட்டி பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ஒலி குரலாக நடித்த விஜய் சேதுபதி அவர்கள் படத்தை முழுமையாக பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்து படம் சூப்பர் என பாராட்டியுள்ளாராம் இதை சிவகார்த்திகேயனே ஒரு மேடையில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *