jailer

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி. சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரூட்டையும் பிடித்து சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார். தனக்கென உகந்த பாணியில் நடித்து அனைவரது மனதில் நின்ற ரஜினி அவர்கள் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடெக்ஷன் பனிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் ரஜினியின் கடந்த சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது தான். இதனால் இந்த படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. அதாவது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் இன்று 6:00 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்க்கில் காத்திருக்கிறார்கள்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *