baakiyalakshmi

பழனிச்சாமி சாரை பாக்கியாவின் குடும்பங்கள் பெண் பார்க்க வர சொன்னார்கள் அப்போது அந்தப் பெண் பழனிசாமி சாரிடம் சில கேள்விகள் கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். இதனால் அந்த பெண் எனக்கு வேண்டாம் என்று கூறிய பழனிசாமி சார் பாக்யாவின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்.

அதன் பிறகு குடும்பத்துடன் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார். வீட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் கோபி பழனிச்சாமி பாக்கியாவை தான் பென் கேட்டு வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு காரில் ராதிகா இருக்கும் போதே புலம்பி கொண்டு இருக்கிறார்.

சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று கோபி புலம்பிக்கொண்டே இருக்கிறார். அதன் பிறகு கோபி ராதிகாவை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வரும்போது பாக்கியாவும் பழனிச்சாமியும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.

அதன் பிறகு செழியனிடம் பாருடா என்ன கூத்து நடக்கிறது என்று புலம்ப செழியன் நல்லா தானே இருக்கு உங்களுக்கு என்ன பிரச்சனை பழனிச்சாமி சார் எங்களுக்கு ஒரு முன் உதாரணம் ஏனென்றால் பல பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறிவிட்டு செழியன் செல்கிறார்.

அதன் பிறகு கோபி பாக்கியாவிடம் நேரடியாக சென்று இது நல்லா இருக்கா வீட்டில் பசங்களை வைத்துக்கொண்டு இப்படி பண்றீங்க என்று பாக்கியவிடம் கேட்கிறான் பாக்கிய உடனே கோபப்பட்டு உங்களுக்கு என்ன சார் பிரச்சனை என் பின்னாடியே சுற்றி வரீங்க என்று கோபியை கோபமாக திட்டி விடுகிறார்.

அதன் பிறகு சமையலறையை விட்டு வெளியே வந்த கோபி இனியாவை பார்கிறார் அதன் பின்னர் இனியாவிடம் பழனிச்சாமி சாரை பற்றி கேட்கிறார் பழனிச்சாமி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று இனியா கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட கோபி புலம்பிக் கொண்டே இருக்கிறார். அதன் பிறகு அவருடைய அப்பா வருகிறார். அப்பாவிடம் இதைப் பற்றி கேட்டது மட்டுமல்லாமல் நம்மளுடைய மானம் மரியாதை எல்லாம் என்ன ஆகிறது என்று அவரிடம் கூறுகிறார் அதற்கு கோபியின் அப்பா மானம் மரியாதை பற்றி நீ பேசுற என்று கூறி பங்குமாக கலாய்த்து விட்டார்.

அதன் பிறகு தன்னுடைய அறைக்கு கோபி செல்கிறார் அங்கு ராதிகா அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைகிறார் அதன் பின்னர் செல்போனை தேடுகிறார் அப்போது அந்த செல்போனை ராதிகா எடுத்து அவரிடம் கொடுக்கிறார். அதன் பின்னர் செல்போனை பார்த்த உடன் என்ன இத்தனை மிஸ்டு கால் என்று கேட்கிறார் அதற்கு ராதிகா என்னை பிக்கப் பண்ண தான் வர சொன்னேன் என்று சொல்கிறார் அஞ்சு பில்டிங் தாண்டி இருக்கிற வீட்ல இருந்து உன்ன பிக்கப் பண்ணி அழைத்துவர 20 நிமிடம் ஆகும் அதுவே நீயே கிளம்பி வந்தா 5 நிமிஷம்தான் ஆகும் என கூறுகிறார் உடனே ராதிகா முறைக்க பார்க்கிறார். ஆனால் கோபி புலம்பிக் கொண்டே தான் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *