jailer

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் 80களில் இருந்து தமிழ் சினிமாவில் ஒரு பொக்கிஷமாக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இதுவரை இவருடைய இடத்திற்கு இணையான ஆள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார் நடிகர் ரஜினி.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி அவர்கள் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி திறையில் வெளியாக காத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த இரண்டு பாடல்கள் மட்டுமல்லாமல் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகி மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் ஜெய்லர் படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்த அனிருத் அவர்கள் ஜெயிலர் படம் குறித்த விமர்சனம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது அனிருத் அவர்கள் தனது twitter பக்கத்தில் ஜெயிலர் என பட பெயரை குறிப்பிட்டு கோப்பை எமோஜியை பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என உறுதியாக நம்புகிறார்கள்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *