leo

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.  இவர் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.  இந்த படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. இதனைத் தொடர்ந்து  இன்று லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து லியோ படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் கொடுத்த பேட்டியில் விஜய் பற்றியும் லியோ படத்தை பற்றியும் பல சுவாரசியமான விஷயங்களை கூறியிருந்தார். மேலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என அவர் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் இன்னும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *