vidamuyarchi

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்  நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட உள்ள நிலையில் படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.

அந்த வகையில் அஜித் நடிக்கும்  திரைப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் புதிருக்குள்ள ஒரு விடுகதை, விடுகதைக்குள்ள ஒரு மர்மம் என்று டைட்டிலுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர விமர்சனத்தை பெற்று நல்ல வரவேற்பை பெற்று வந்தது இதனை தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *