jailer

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று. இந்த திரைப்படத்தை நெல்சன்  இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திர பட்டாள்கள் நடித்துள்ளனர். இவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் நாளை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவர் சமீப காலங்களாக நடித்த திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ஓடவில்லை இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வெற்றியடைமா? தோல்வி அடையுமா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதாவது பொன்னியின் செல்வன் ஒரு நாள் வசூளைவிட ஜெயிலர் வசூல் அதிகம் பெரும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தை விட ஜெயிலர் திரைப்படம் ஒரு நாளில் நூறு கோடிக்கு மேல் வசூல் அடிக்கும் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

By tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *